close
Choose your channels

விஜய் 60' படத்தின் இசையமைப்பாளர் யார்?

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துவரும் 'விஜய் 59' படத்தின் டைட்டிலே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அவர் நடிக்கவுள்ள 60வது படத்தின் தகவல்கள் விறுவிறுப்பாக வெளியாகி வருகின்றது.

முதலில் விஜய் 60' படத்தின் இயக்குனர் பரதன் என்றும், எடிட்டர் ப்ரவீண் என்றும் அறிவிக்கபட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

இந்த படத்தில் இசையமைக்க சந்தோஷ் நாராயணன், அனிருத் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இவர்களில் ஒருவர் வெகுவிரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த 'புதிய கீதை' படத்திற்கு பின்னர் விஜய் படத்திற்கு இசையமைக்கவில்லை. சந்தோஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டால் அவர் இசையமைக்கும் முதல் விஜய் படம் இதுவாகத்தான் இருக்கும். இவர்கள் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்களா? அல்லதி கத்தி படத்திற்கு இசையமைத்த அனிருத் தேர்வு செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.