close
Choose your channels

மீண்டும் இணையும் விஜய்-அட்லி கூட்டணி?

Wednesday, November 25, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கோவாவில் நடைபெற்று வருகிறது. தற்போது விஜய்-எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வந்தாலும் கிட்டத்தட்ட 90% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் ஒருசில பேட்ச்வொர்க் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலை தவிர மீது அனைத்து பாடல்களும் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டதாகவும், அந்த ஒரு பாடலும், இவ்வருட இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,.

மேலும் இந்த படத்தின் ரிலீஸுக்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் அட்லி குழுவினர் மிகவும் பொறுமையாக அதே நேரத்தில் சிறப்பான முறையில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் செய்ய கால அவகாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அட்லியின் டைரக்ஷன் ஸ்டைல் விஜய்யை மிகவும் கவர்ந்ததாகவும், மிக விரைவில் மீண்டும் விஜய்-அட்லி கூட்டணி இணைய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.