close
Choose your channels

'மெர்சல்' அமெரிக்கா ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

Monday, September 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே வியாபாரமும் தொடங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை அட்மஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவை அடுத்து பிறநாடுகள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் ரிலீஸ் உரிமை குறித்த வியாபார பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.