close
Choose your channels

அஜித்துக்கும் விஜய்சேதுபதிக்கும் ஒரு வாரம் தான் வித்தியாசம்! எப்படி தெரியுமா?

Wednesday, August 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் ஆவது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டதால் அதற்கு முன்பே சுமார் 10 திரைப்படங்கள் அவசர அவசரமாக ரிலீஸ் ஆகின்றது.

இந்த நிலையில் அஜித் படம் வெளியான அடுத்த வாரத்தில் விஜய்சேதுபதி படம் ஒன்று வெளியாகிறது. விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்' திரைப்படம் ரிலீசுக்கு பல மாதங்களுக்கு முன்பே தயாராகிய நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி அதாவது 'விவேகம்' ரிலீஸ் ஆன அடுத்த வாரம் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' நாயகி காயத்ரி, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் இசையமைப்பில், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், பவன்ஸ்ரீகுமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய்சேதுபதி நடித்த 'விக்ரம் வேதா' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்த நிலையில் ஒருசில வார இடைவெளியில் அவருடைய அடுத்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.