close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த பட தலைப்பு

Wednesday, November 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல், தற்போது கார்த்தி, நயன்தாரா நடித்து வரும் காஷ்மோரா' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பரில் மீதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கோகுல் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோகுலிடம் கதையை கேட்ட விஜய்சேதுபதி, இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இந்த படத்திற்கு 'போங்கு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'காஷ்மோரா' படத்தை கோகுல் முடித்தவுடன் 'போங்கு' படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. விஜய்சேதுபதி ஏற்கனவே மெல்லிசை', 'இறவி', 'காதலும் கடந்து போகும்', சேதுபதி', விக்னேஷ் சிவனின் அடுத்த படம், தனுஷ் தயாரிக்கும் படம் என கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.