close
Choose your channels

விஜய்சேதுபதியின் முதல் பெரிய பட்ஜெட் படம் குறித்த அறிவிப்பு

Monday, September 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர் என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை தனது ரசிகர்களுக்கு அளித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஏற்கனவே சுமார் பத்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது 'இதற்குத்தானா பாலகுமாரா' இயக்குனர் கோகுலுடன் இணைந்து மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஜங்கா' என்ற தலைப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை விஜய்சேதுபதியே தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இயக்குனர் கோகுல் கூறியதாவது: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். நான் அப்போது பொருத்தமான கதை உருவானவுடன் நானே வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவருக்கு ஏற்ற வகையில் ஜுங்கா` கதை தயாரானதும், அவரை சந்தித்து கதையை சொல்லத்தொடங்கினேன். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, இந்த கதையை நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியை தாண்டும். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படம். அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கிறார்.
அறுபது சதவீத படம் பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் ஒப்பந்தமாகியிருக்கிறார். அத்துடன் முக்கியமான கேரக்டரில் யோகி பாபுவும் நடிக்கிறார். ஆண்டவன் கட்டளை` என்ற படத்திற்கு பிறகு யோகி பாபு, இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ஏனைய தொழில்நுட்ப கலைஞர்களைப் பொறுத்தவரை முன்னணி கலைஞர்கள் பலர் பணியாற்றவிருக்கிறார்கள். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் தெரிவிக்கிறேன்.
விஜய் சேதுபதியின் மாஸ் எண்டர்டெயினராக இப்படம் இருக்கும். காமெடி ஆக்ஷன் லவ் என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் சரியான அளவில் இடம்பெற்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகவிருக்கிறது.இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது.` என்று கோகுல் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.