close
Choose your channels

'தர்மதுரை' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, April 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நானும் ரவுடிதான், சேதுபதி, காதலும் கடந்து போகும் என ஹாட்ரிக் வெற்றிப்படங்களில் நடித்த விஜய்சேதுபதியின் நான்காவது வெற்றிப்படம் என எதிர்பார்க்கப்படும் படம் 'தர்மதுரை'. இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

'தர்மதுரை படத்தின் ஆடியோ வரும் மே மாதம் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் அமைந்துள்ள இந்த படத்தின் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்த்ககது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.