close
Choose your channels

ஈசிஆர் சாலையில் விஜய் சேஸிங் காட்சிகள் படப்பிடிப்பு

Thursday, July 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பீச் அருகே இந்த படத்தின் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஸ்டண்ட் கலைஞர்களுடன் விஜய் ஆக்ரோஷமாக மோதும் காட்சிகளை அடுத்து விஜய், ராதிகா மற்றும் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளும் இதே பகுதியில் படமாக்கப்படவுள்ளது.

மேலும் போலீஸ் உடையணிந்த விஜய், சேஸிங் செய்யும் காட்சி ஒன்றும் விரைவில் படமாக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா, நான் கடவுள் ராஜேந்திரன், காளி வெங்கட் மற்றும் இவர்களுடன் பிரபல இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.