close
Choose your channels

இளையதளபதி விஜய்யின் 'தெறி' ரன்னிங் டைம்

Tuesday, April 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'தெறி' திரைப்படம் மொத்தம் 158 நிமிடங்கள் 11 வினாடிகள் ஓடுகின்றது. அதாவது மூன்று மணி நேரத்திற்கு 22 நிமிடங்களே குறைவு. பொதுவாக இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேல் சில நிமிடங்கள் மட்டுமே தற்போதைய பெரும்பாலான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் விஜய் போன்ற பெரிய ஸ்டார்களின் படங்களின் நீளம், படத்திற்கு மைனஸ் ஆக தெரிவதில்லை என்பது ஏற்கனவே பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளிவரவிருக்கும் 'தெறி' படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா, மகேந்திரன், ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.