close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த ஹீரோ விக்ரம்?

Sunday, November 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன், விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே பார்த்தோம். 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'மர்ம மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் உள்பட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் விக்ரமுடன் முதன்முதலாக நயன்தாரா ஜோடி சேர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா ஏற்கனவே ஜீவாவுடன் திருநாள் மற்றும் கார்த்தியுடன் காஷ்மோரா ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.