close
Choose your channels

அஜீத், விஜய்யுடன் இணைந்தார் விக்ரம்

Saturday, August 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தல அஜீத்' நடித்து வரும் 'தல 56' திரைப்படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜய்யின் 'புலி' டிரைலர் அதே தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அஜீத், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் விக்ரம், நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் டீசர் அதே ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

'10 எண்றதுக்குள்ள' படத்தின் தயாரிப்பாளர் நேற்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 21 என அறிவித்திருக்கும் நிலையில் இன்று டீசர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் முக்கியமானதாக கருதப்படும் ரயில் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு வரும் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெறவுள்ளதாகவும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விக்ரம், இருவேடங்களில் சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா, சார்மி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கோலி சோடா' இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அவரே ஒளிப்பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.