close
Choose your channels

விக்ரம்-விஜய்சந்தர் படத்தின் புதிய அப்டேட்

Sunday, March 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'வாலு' இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்திலும் விக்ரம் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னாவும், அம்மாவாக அம்பிகாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்.தமன் இந்த படத்திற்காக மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் மீதி பாடல்களை விரைவில் முடித்துவிடுவார் என்றும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பாகத்தான் இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் சந்தரின் முந்தைய படமான 'வாலு' படத்திற்கும் தமன் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.