close
Choose your channels

விக்ரம்-தமன்னா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

Thursday, April 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் 'வாலு' இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்திலும் அவர் இன்னொரு படம் நடித்து வருகிறார்.
விக்ரம்-விஜய்சந்தர் படத்தின் நாயகியாக தமன்னா நடித்து வருகிறார். விக்ரம்-தமன்னா முதன்முதலில் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அஜித்தின் 'விவேகம்' படத்தின் புதிய ஸ்டில் வெளிவந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ், ராதாரவி, சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இன்று வெளியாகவுள்ள டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கில் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.