close
Choose your channels

விக்ரமுக்கு 'இருமுகன்' குழு தரும் சிறப்பு பரிசு

Saturday, April 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம், நயன்தாரா முதன்முதலாக இணைந்து நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய இதுதான் சரியான நேரம் என இயக்குனர் விக்ரம்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.


இந்நிலையில் நாளை விக்ரமின் 50வது பிறந்தநாள் சிறப்பான முறையில் படக்குழுவினர் கொண்டாடவுள்ளனர். இந்த பிறந்த நாளில் விக்ரமுக்கு வித்தியாசமான பரிசு தரும் வகையில் 'இருமுகன்' படத்த்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். ஒரு கெட்டப்பின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் மற்றொரு கெட்டப்பின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மேலும் இந்த படத்தின் 60% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஷிபு தமின்ஸ் தயாரிப்பில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் நித்யாமேனன் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.