close
Choose your channels

தனுஷின் 'விஐபி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

Friday, July 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பிற்கு சென்சார் நடைமுறைகளின் தாமதமே என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிக்ள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளிவரும் என்றும் சரியான ரிலீஸ் தேதி குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

ஆக்ஸ்ட் 10ஆம் தேதி தல அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் 'விஐபி 2' திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.