close
Choose your channels

தனுஷின் 'விஐபி 2' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, June 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என அனைத்து துறையிலும் வெற்றி பெற்று வரும் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் ரம்ஜான் திருநாளில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டீசர் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'விஐபி 2' படத்தின் டீசர் இம்மாதம் 7ஆம் தேதி வெளிவரவுள்ளதாகவும், ரகுவரனை மீண்டும் திரையில் பார்க்கும் நாள் அது என்றும் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.