close
Choose your channels

'தல' திரும்பாமல் இருக்க முடியாது: சேவாக்

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே அதிரடி ஆட்டக்காரர் சேவாக் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள். அவருக்கு முன்பும், அவருக்கு பின்னரும் அதிரடி ஆட்டத்தின் மூலம் சாதனை படைத்தவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம்
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே சேவாக் தனது சமூக வலைத்தளத்தில் நகைச்சுவையுடன் கூடிய கருத்துக்களை பதிவு செய்து 11 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு நூலிழையில் அந்த பதவியை பெறும் வாய்ப்பை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் சேவாக் தனதுசமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கணவன் - மனைவி இருவரில் கணவர் தலை போன்றவர், மனைவி கழுத்து போன்றவர். தல என்னதான் முக்கியமாக இருந்தாலும் அது கழுத்து சொல்படிதான் திரும்ப வேண்டும் என்று பதிவு செய்தார். தன் மனைவி செல்பி எடுக்க விரும்பியதாகவும், அதை மறுக்காமல் நிறைவேற்றியதையும் கூற, அவர் மேற்கண்ட கருத்தினை நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார். சேவாக்கின் இந்த பதிவிற்கு லைக்குகள் பெருகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.