close
Choose your channels

விஷால்-பாண்டியராஜ் படத்தின் டைட்டில்

Thursday, August 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாயும் புலி' திரைப்படம் வரும் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ள நிலையில் விஷால் அடுத்து 'கொம்பன்' இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு 'மருது' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.


இந்நிலையில் விஷால், தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்போது 'கதக்களி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த படத்தின் படப்பிடிபு சென்னையில் நடைபெற்று வருகிறது. மெட்ராஸ்' பட நாயகி கேதரின் தெரசா, இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

'கதக்களி' என்பது கேரளாவின் புகழ்பெற்ற ஒரு நடனக்கலையின் பெயர். எனவே இந்த படம் நடனம் சம்பந்தப்பட படமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த டைட்டிலை இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்றும் அதற்கு காரணம் 'கதக்களி' என்ற வார்த்தை மலையாள சொல்லாக இருப்பதால், இந்த டைட்டிலை வைத்தால் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.