close
Choose your channels

விஷாலின் 'மதகஜ ராஜா' ரிலீஸ் தேதி?

Thursday, November 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்று புதிய பொதுச்செயலாளராக பதவியேற்ற விஷால், நடிகர் சங்கத்தில் பல மாற்றங்களை கொண்டு வர தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால், நலிந்த நடிகர்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், அவர் நடித்து நீண்டநாள் கிடப்பில் இருந்த 'மதகத ராஜா' படத்திற்கும் தற்போது விடிவுகாலம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஃபைனான்ஸ் பிரச்சனையால் கடந்த மூன்று வருடங்களாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்த இந்த படத்தை ரிலீஸ் செய்ய விஷால் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தை தற்போது சுமூகமாக முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சோனுசூட், சதா, மணிவண்ணன், சந்தானம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.