close
Choose your channels

விஷால் ரசிகர்களுக்கு மீண்டும் ஏற்பட்ட ஏமாற்றம்

Monday, April 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்பட பலர் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'மதகஜராஜா' திரைப்படம் பலவிதமான பிரச்சனைகளுக்கு பின்னர் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரிலீஸூக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


'மதகஜராஜா' வரும் மே மாதம் 13ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனால் மே மாதம் 20ஆம் தேதி விஷால் நடித்த மற்றொரு படமான 'மருது' திரைப்படம் வெளிவரவுள்ளதாக கூறப்படும் நிலையில் ஒருவாரத்திற்கு முன்னர் 'மதகஜராஜா' ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மதகஜராஜா' படத்திற்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளை நடிகர் சங்க செயலாளர் பதவியை ஏற்றபின் ஒவ்வொன்றாக முடித்து வைத்து ரிலீஸ் தேதியையும் அறிவித்த நிலையில் மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளதால் விஷால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.