close
Choose your channels

எம்.ஜி.ஆரின் பிரச்சனையை தீர்க்க விஷால் முயற்சி

Tuesday, November 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி நடித்த திரைப்படம் 'மதகஜ ராஜா (MGR). இந்த படம் கடந்த 2013ஆம் ஆண்டே முடிவடைந்துவிட்டாலும் ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக இரண்டு வருடங்களாக முடங்கியுள்ளது.

ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்த இந்த படத்தை ரிலீஸ் செய்ய விஷால் தனது சொந்த முயற்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீவிர முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளராக விஷால் பொறுப்பேற்றுள்ளதால் இந்த படத்திற்கு விடிவுகாலம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் பிரச்சனை குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், வரும் டிசம்பரில் இந்த படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது. நடிகர் சங்கத்தின் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பொறுப்பில் உள்ள விஷால், தன்னுடைய சொந்த பிரச்சனையும் விரைவில் தீர்த்து, இந்த படம் வெளியாக அனைத்து முயற்சிகளையும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.