close
Choose your channels

பிரபல திமுக எம்.எல்.ஏவுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு

Wednesday, March 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் அடுத்த மாதம் நடைபெறும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது அணியினர் சங்கத்தின் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலின்போது செய்த அதிரடி பிரச்சாரத்தை போல இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வெற்றி பெற அனைத்து தயாரிப்பாளர்களிடம் நேரடியாக சென்று விஷால் அணியினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திமுக பிரமுகரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகன் அவர்களை நேரில் சந்தித்து விஷால் ஆதரவு கேட்டுள்ளார். ஜெ.அன்பழகன் ஜெயம் ரவி நடித்த 'ஆதிபகவான்' என்ற படத்தை தயாரித்தவரும் ஒருசில படங்களை விநியோகம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு குறித்து ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.