close
Choose your channels

விஷாலின் 'துப்பறிவாளன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, July 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்தில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மிஷ்கினுடன் முதல்முறையாக விஷால் இணைந்துள்ள இந்த துப்பறியும் படத்தின் டீசருக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கணியன் பூங்குன்றனார் என்ற கேரக்டரில் விஷால் நடித்துள்ள இந்த படத்தில் பிரசன்னா, வினய், அனு இமானுவேல், ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ், தலைவாச விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.