close
Choose your channels

பரவை முனியம்மாவுக்கு விஷால் உதவி

Tuesday, July 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்த 'தூள்' என்ற படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல' என்ற பாடலில் சிங்கம் போல் கர்ஜித்த பிரபல பாடகி மற்றும் நடிகை பரவை முனியம்மாவை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. 'தூள்' படத்திற்கு பின்னரும் அவர் பல படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது உடல்நலமின்றி இருப்பதாகவும், மருத்துவ செலவுக்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகின.


பரவை முனியம்மாவின் உடல்நிலை குறித்த செய்திகள் வெளியானவுடன் சமூக வலைத்தளங்களில் பலர் அவருடைய மருத்துவ செலவுக்கு உதவி செய்யுமாறு கேட்டு கொண்டனர். மேலும் நடிகர்கள் விஷால் அல்லது சரத்குமார் அல்லது இருவரும் இணைந்து பரவை முனியம்மாவின் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பலர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதுகுறித்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் விஷால், உடனடியாக பரவை முனியம்மாவை தொடர்பு கொண்டு மருத்துவ செலவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஒப்புக்கொண்டதாகவும், நவீன வசதி கொண்ட மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் விஷால் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.