close
Choose your channels

துப்பறிவாளன், மகளிர் மட்டும் படங்களின் தமிழக வசூல் நிலவரம்

Tuesday, September 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளிவந்த விஷாலின் 'துப்பறிவாளன்' மற்றும் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாராட்டுக்களை பெற்று நல்ல ஓப்பனிங் வசூலையும் பெற்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் தமிழக வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. விஷாலின் 'துப்பறிவாளன்' கடந்த 11 நாட்களில் தமிழகத்தில் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக சென்னையில் ரூ.2.86 கோடியும், கோவையில் ரூ.3.2 கோடியும், செங்கல்பட்டில் ரூ.5.2 கோடியும், நெல்லை-குமரியில் ரூ.70 லட்சமும் வசூல் செய்துள்ளது.

அதேபோல் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படம் கடந்த 10 நட்களில் சென்னையில் ரூ.1.72 கோடியும், கோவையில் ரூ.2.1 கோடியும், செங்கல்பட்டில் ரூ.3.3 கோடியும் வசூல் செய்துள்ளது. 

ஒட்டுமொத்த தமிழக வசூலை பொருத்தவரையில் இரு படங்களுமே சராசரி வசூலை பெற்று விநியோகிஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.