close
Choose your channels

விஷாலுக்காக மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிய வடிவேலு

Wednesday, April 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது பாண்டவர் அணிக்கு பக்கபலமாக இருந்த வடிவேலு, தற்போது விஷால் நடிக்கும் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் காமெடியனாக களமிறங்குகிறார்.


'மருது' படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் விஷால் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு 'கத்திச்சண்டை' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் காமெடியனாக மீண்டும் களமிறங்குகிறார் வடிவேலு. சுராஜ் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மீண்டும் பழைய ஃபார்மில் வடிவேலு இந்த படத்தில் களமிறங்குவதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.