close
Choose your channels

விஷாலின் 'சண்டக்கோழி 2' ஆரம்பம் எப்போது? விஷால் விளக்கம்

Thursday, November 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தேர்தலின் வெற்றிக்கு பின்னர் விஷால் தற்போது முழுவீச்சில் படப்பிடிப்புக்கு சென்று வருகிறார். பாண்டியராஜ் இயக்கும் 'கதகளி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 'கொம்பன்' பட இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'மருது' படத்தின் படப்பிடிப்பிலும் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக முதல்முறையாக ஸ்ரீதிவ்யா நடிக்கின்றார். நடிகர் சங்க தேர்தலில் விஷாலுடன் போட்டியிட்டு தோல்வியடைந்த ராதாரவி முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். வேல்ராஜ் இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்நிலையில் விஷாலின் நீண்டநாள் கனவுப்படமான 'சண்டக்கோழி 2' படம் குறித்த செய்திகளும் வெளிவந்துள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'சண்டக்கோழி 2' படம் வரும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக விஷால் கூறியுள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைப்பார் என ஏற்கனவே இயக்குனர் லிங்குசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் நடித்த 'கதகளி' பொங்கல் தினத்திலும், 'மருது', கோடைவிடுமுறையிலும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.