close
Choose your channels

தனுஷுக்கு வில்லனாகும் 'பாயும் புலி' நடிகர்

Thursday, July 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் 'மாரி' என்ற சூப்பர் ஹிட் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்த தனுஷ் தற்போது 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் பிரபுசாலமன் இயக்கி வரும் படத்தில் இணைந்து கொள்வார் என கூறப்படுகிறது.


இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் கதை சென்னையில் இருந்து புதுடெல்லி செல்லும் நான்ஸ்டாப் டோரண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் நடக்கும் விறுவிறுப்பாக சம்பவங்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ரயிலில் பயணம் செய்யும் மலையாள கமாண்டோ வேடத்தில் நடிக்கும் இவருக்கு வில்லன் கேரக்டர் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 'யாகாவராயினும் நா காக்க' படத்தில் மிதுன் சக்கரவர்த்தியின் மகனாக நடித்தவர் என்பது தெரிந்ததே. தற்போது விஷாலின் 'பாயும் புலி' மற்றும் சுசீந்திரன் தயாரிக்கும் 'வில் அம்பு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.