close
Choose your channels

சிவாஜி பேரனின் 2வது படத்தில் விஷ்ணு-மஞ்சுமா மோகன்

Friday, February 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பேரனும் ராம்குமார் மகனுமான துஷ்யந்த் தயாரித்த 'மீன்குழம்பும் மண்பானையும்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகிய நிலையில் தற்போது அவர் தனது இரண்டாவது தயாரிப்பை தொடங்கவுள்ளார்.

ஈஷான் புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் 2வது படத்தில் விஷ்ணுவிஷால் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக 'அச்சம் என்பது மடமையடா' நாயகி மஞ்சுமா மோகன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் முருகானந்தம் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஷ்ணு நடித்த 'கதாநாயகன்' படத்தை இயக்கியுள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

விஷ்ணு, மஞ்சுமா நடிக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.