close
Choose your channels

ஹங்கேரி நாட்டில் 'விவேகம்' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

Sunday, August 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்திற்கான முன்பதிவு உலகம் முழுவதிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் சுமார் 95% திரையரங்குகளில் 'விவேகம்' திரைப்படம் வெளியாகவுள்ளது என்பதை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் ஹங்கேரி நாட்டில் உள்ள ALEE MALL என்ற திரையரங்கில் 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையிடப்படுகிறது. இதில் ஒரு பெருமைக்குரிய விஷயம் என்னவெனில் இதுவரை ஹங்கேரியில் எந்த ஒரு தமிழ்ப்படமும் ரிலீஸ் ஆனது இல்லை. ஹங்கேரி நாட்டில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற மிகப்பெரிய பெருமையை 'விவேகம்' திரைப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'விவேகம்' சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படம் அமீர்கானின் 'டங்கல்', எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.