close
Choose your channels

சத்யஜோதி நிறுவனத்திற்கு சந்தோஷத்தை கொடுத்த 'விவேகம்' வியாபாரம்

Saturday, August 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் தேசிய விருது பெற்ற 'மூன்றாம் பிறை' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் தயாரிப்பு நிறுவனமாக நுழைந்த சத்யஜோதி நிறுவனம் அதற்கு பின்னர் பல வெற்றி படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்நிறுவனம் தயாரித்த 'தொடரி' மற்றும் 'சத்ரியன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அஜித்தின் 'விவேகம்' படத்தின் வியாபாரம் அதை மறக்கடிக்கச் செய்யும் அளவில் அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது..

'விவேகம்' படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டினாலும் இந்த படத்தின் தமிழக உரிமை மட்டுமே ரூ.54.5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அஜித்தின் முந்தைய படங்களான 'வீரம்' ரூ.34 கோடிக்கும், 'வேதாளம் ரூ.42 கோடிக்கும் வியாபாரம் ஆன நிலையில் இந்த படம் ரூ.54.5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது அஜித்துக்கும் ஒரு சாதனைதான்.

அஜித்தின் அடுத்த படத்தையும் இதே சத்யஜோதி நிறுவனம்தான் தயாரிக்கும் என்று செய்திகள் அடிபடுகின்றன. இந்த செய்தி உண்மையானால் அதைவிட வேறு சந்தோஷம் இந்நிறுவனத்திற்கு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.