close
Choose your channels

'விவேகம்' புதிய ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

Wednesday, August 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்றைய சுதந்திர தினத்தன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவேகம் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை புரமோஷன் செய்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 27 நிமிடங்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்ற செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த படம் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முந்தைய நாள் அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகின் பல நகரங்களில் பிரிமியர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டிக்கெட் விற்பனையும் முடிந்துவிட்டது. இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புள்ள திரைப்படங்களில் ஒன்றான இந்த படம், 'பாகுபலி 2' படத்திற்கு பின்னர் மிகப்பெரிய வசூலை குவிக்கும் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.