close
Choose your channels

தமிழக மக்கள் தொகையில் 8ல் ஒன்று. விவேகம் செய்த மகத்தான் சாதனை

Sunday, May 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படத்தின் டீசர் கடந்த 11ஆம் தேதி வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய 'கபாலி' சாதனை உள்பட பல சாதனைகளை பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும், லைக்ஸ்களிலும் உடைத்தெறிந்தது.

அஜித்தின் யங் லுக், பிரமாண்டம், ஜேம்ஸ்பாண்ட் டைப் காட்சிகள், அஜித்தின் பஞ்ச் வசனம், அனிருத்தின் பின்னணி இசை, வெளிநாட்டு காட்சிகள் என பல அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் வகையில் இந்த டீசர் இருந்ததாக அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'விவேகம்' டீசர் யூடியூப் இணையதளத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கிவிட்டது. தமிழகத்தின் மக்கள் தொகையே 8 கோடிதான். அப்படியென்றால் 8 பேரில் ஒருவர் விவேகம் டீசரை பார்த்துவிட்டார்களா? என்று எண்ணும் அளவுக்கு இந்த டீசரின் பார்வையாளர்கள் எண்ணிக்கை உள்ளது.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த படம் கபாலி, பாகுபலி 2 படங்களை அடுத்து மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.