close
Choose your channels

சூப்பர் ஸ்டாரின் 'கபாலி'யை அடுத்து புதிய சாதனை நிகழ்த்திய அஜித்தின் 'விவேகம்'

Tuesday, June 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக ஒரு திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை செய்வதற்கு முன்னரே அந்த படத்தின் டீசர், டிரைலர், ஆகியவை வெளியாகி யூடியூபில் பார்வையாளர்கள் மற்றும் லைக்குகள் ஆகியவற்றில் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் திரைப்படத்தை பொருத்தவரையில் இதுவரை அதிக லைக்குகள் பெற்று சாதனை செய்த படமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படம் உள்ளது. இந்த படத்தின் டீசருக்கு 4.64 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே 10 லட்சம் பார்வையாளர்களை ஒருசில நாட்களில் பெற்று சாதனை செய்துள்ள தல அஜித்தின் 'விவேகம்' திரைப்படத்தின் டீசர் தற்போது 4 லட்சம் லைக்குகளை பெற்று 'கபாலி'க்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.