close
Choose your channels

ஆசிட் தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு அஜித் பட வில்லன் செய்த உதவி

Friday, March 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தல' அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் வில்லனும் பிரபல பாலிவுட் நடிகருமான விவேக் ஓபராய் நடிகர் மட்டுமின்றி சிறந்த சமூக சேவகர் என்று அனைவராலும் போற்றப்படுபவர். சென்னையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் பல உதவிகள் செய்தவர்.
இந்நிலையில் சமீபத்தில் ஆசிட் தாக்குதலுக்கு ஆளான லதா என்ற பெண், வேலையின்றி கஷ்டப்படுவதை கேள்விப்பட்ட விவேக் ஒபராய் அவருக்கு தனது நிறுவனங்களில் ஒன்றில் வேலை கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் இருப்பதை அறிந்து தனது ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் ஒரு புதிய வீட்டையும் பரிசாக கொடுத்துள்ளார். மேலும் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
விவேக் ஓபராய் செய்த இந்த மகத்தான உதவியால் லதாவின் வாழ்வில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்டு திக்கு தெரியாமல் இருந்து தனக்கு தற்போது கைநிறைய சம்பளம், சொந்த வீடு என்று மகிழ்ச்சியாக இருக்க வைத்த விவேக் ஓபராய்க்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக லதா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.