close
Choose your channels

பைக்கை பார்த்தா காலேஜ் பையன் மாதிரி குஷியாகிவிடுவார் அஜித்: விவேக் ஓபராய்

Wednesday, July 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'விவேகம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள விவேக் ஓபராய் சமீபத்தில் இந்த படம் குறித்தும் அஜித் குறித்தும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள பைக் சேஸிங் காட்சிகளில் அஜித் நடிக்கும்போது அவரிடத்தில் உள்ள இன்வால்மெண்ட் பார்த்து தான் அதிசயித்ததாக கூறியுள்ளார். பைக்கை பார்த்ததுமே காலேஜ் பையன் போல குஷியாகிவிடும் அஜித், எவ்வளவு ரிஸ்கான பைக் காட்சியாக இருந்தாலும் டூப் போட சம்மதிக்க மாட்டார் என்றும், பைக் சண்டை காட்சியின்போது அவருடைய உடம்பில் ஒரு சின்ன கீறல் கூட விழாமல் ஸ்டண்ட் இயக்குனர் கலாயோன் பார்த்து கொண்டதாகவும் விவேக் ஓபராய் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

ஆக்சனை பொறுத்தவரையில் ஹாலிவுட் தரத்தை கிட்டத்தட்ட தொட்டுவிட்ட படமாக 'விவேகம்' படம் இருக்கும் என்றும், இந்த படத்தில் தானும் ஒரு அங்கமாக இருந்ததற்கு பெருமைப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.