close
Choose your channels

உதயநிதி-ஹன்சிகா படப்பிடிப்பில் இணைந்த விவேக்

Saturday, November 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மகனை இழந்து மீளாத்துயரில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக், தற்போது தன்னுடைய துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அவர் தற்போது ஒரு முழுநீள காமெடி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

'என்றென்றும் புன்னகை' இயக்குனர் அஹமது இயக்கி வரும் 'ஜாலி எல்.எல்.பி படத்தின் தமிழ் ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் விவேக் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராதாரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விவேக்கின் பிறந்த நாள் வரும் 19ஆம் தேதி வருகிறது. ஆனால் இவ்வருடம் தான் பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.