close
Choose your channels

ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித்தா? கமல்ஹாசனா?

Thursday, September 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.

இந்த நிலையில் ஷங்கரின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும், கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்' படத்திற்கு பின்னர் மீண்டும் 20 வருடங்களுக்கு பின் இருவரும் இணையவுள்ளதாகவும் இன்னொரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஒருபக்கம் அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று மூன்று மாத ஓய்வில் இருக்கின்றார். இன்னொரு பக்கம் கமல்ஹாசன் எந்த நேரமும் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் ஷங்கர் படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கின்றதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.