close
Choose your channels

யார் அடுத்த தமிழக முதலமைச்சர்? அரவிந்தசாமி கூறிய ஆலோசனை

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் கிளப்பிய அரசியல் புயல் இன்னும் சுழன்றடித்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரில் யார் அடுத்த முதல்வர் என்பதை அறிய தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கின்றது.

இந்நிலையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர்ராவ் சென்னை வரவுள்ளதாகவும், அவர் வந்தபின்னர் யார் அடுத்த முதலமைச்சர் என்பது தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் அரவிந்தசாமி தமிழக மக்களுக்கு கோரிக்கை ஒன்றை தனது சமூக வலைத்தளத்தின் மூலம் வைத்துள்ளார். தமிழக மக்கள் உடனடியாக தங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களையோ, அல்லது உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகளையோ தொடர்பு கொண்டு யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற தங்களுடைய கருத்தை உடனே தெரிவிக்க வேண்டும் என்றும், மக்களின் விருப்பத்தை அறிந்து ஜனநாயகப்படிதான் முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரவிந்தசாமியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.