close
Choose your channels

அஜீத் சாதனையை முறியடிப்பாரா விஜய்?

Monday, July 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவரை வெளிவந்த தமிழ்ப்படங்களின் டீசரில் 'ஷங்கர் இயக்கிய 'ஐ' திரைப்படம்தான் அதிகளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீஸரை ஒரு கோடியே 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த படத்தை அடுத்து அஜீத் 'நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் டீசர் 53 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் பிறந்த நாள் அன்று வெளியான 'புலி' படத்தின் டீசரை இதுவரை சுமார் 51 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இன்னும் இந்த படத்தின் டீஸரை ஏராளமானோர் பார்த்து கொண்டு வருவதால் விரைவில் அஜீத் படத்தின் சாதனையான 53 லட்சத்தை 'புலி' படத்தின் டீஸர் முறியடித்துவிடும் என கூறப்படுகிறது.

வரும் செப்.17ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்படும் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இளையதளபதியின் மாறுபட்ட 'தளபதி' வேடத்தை ரசிக்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது. விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.