close
Choose your channels

காலையில் சென்னை. மாலையில் ஐதராபாத். சூர்யாவின் மெகா திட்டம்

Monday, April 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


இந்த படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளின் இசை வெளியீட்டு விழாக்களையும் ஒரே நாளில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு காலையில் சென்னையிலும் மாலையில் ஐதராபாத்திலும் இந்த விழாக்களை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'காலம் என் காதலி' என்ற சிங்கிள் டிராக் ஏற்கனவே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மற்ற பாடல்களையும் கேட்க சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர்களுடைய ஆசை வரும் 11ஆம் தேதி நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் ஏப்ரல் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சூர்யா, சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விக்ரம்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.