close
Choose your channels

ஆர்யாவின் 'யட்சன்' பட டிராக்லிஸ்ட்

Sunday, August 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' மற்றும் புரட்சி தளபதி விஷால் நடித்த 'பாயும் புலி' ஆகிய இரு படங்களின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ள நிலையில் நாளை ஆர்யா-கிருஷ்ணா நடித்த 'யட்சன்' படத்தின் பாடல்கள் சென்னையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் தேசியவிருது பெற்ற பாடலாசிரியர் பா.விஜய் எழுதியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவே இந்த படத்தின் மூன்று பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ள இந்த படத்தின் டிராக்லிஸ்ட் விபரங்களை பார்ப்போம்.

1. பர பர' என்று தொடங்கும் இந்த பாடலை விஜய் ஜேசுதாஸ் மற்றும் ரஞ்சித் பாடியுள்ளனர். இரண்டுமே ஆண்குரலாக இருப்பதாக இந்த பாடல் ஆர்யா-கிருஷ்ணா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. 'கொஞ்சலை' என்று தொடங்கும் அடுத்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் தான்வி ஷா ஆகியோர் பாடியுள்ளனர்.

3. 'காகபொண்ணு' என்று தொடங்கும் இந்த பாடலை ஆண்டனிதாசன், பிரியதர்ஷினி மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

4. 'இன்னும் என்ன' என்று தொடங்கும் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா தனித்து பாடியுள்ளார்.

5. 'சாம்பியன்' என்று தொடங்கும் இந்த பாடலை ராபிட் மேக், ஷீஜி ஆகியோர் பாடியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.