close
Choose your channels

உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்கு புது வழி காட்டும் சங்கமித்ரா

Tuesday, May 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ராம்நாராயணன் அவர்கள் 100 படங்கள் இயக்கிய ஒரு வெற்றி இயக்குனர். தனது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பட படங்கள் தயாரித்து கோலிவுட் திரையுலகில் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். அவரது கொள்கை குறைந்த பட்ஜெட்டில் பெரிய ஸ்டார் இல்லாமல் மினிமம் கியாரண்டி படம் கொடுக்க வேண்டும் என்பதே. அவரது படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் பெரும்பாலும் தோல்வி அடைந்ததில்லை.

இந்த நிலையில் அவரது மறைவிற்கு பின்னர் அவரது குடும்பத்தினர் பொறுப்புக்கு வந்த பின்னர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், தேனாண்டாள் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புத்துணர்வு பெற்று மிகக்குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் தாரக மந்திரம் என்னவெனில் பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார், பெரிய முதலீடு அதன் பின்னர் பெரிய லாபம் என்பதுதான். இதன் முதல் படியாக இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் மிகப்பெரிய பட்ஜெட் படம் 'தளபதி 61. அதுமட்டுமின்றி ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் சுந்தர் சி இயக்கும் 'சங்கமித்ரா'.

தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் சுந்தர் சி அவர்களும் மிக நேர்த்தியாக திட்டமிட்டு 'சங்கமித்ரா' பணியை கவனித்து வருகின்றனர். கடந்த ஒருவருடமாக இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. பிரபல எழுத்தாளர்கள் சுபா, பிரமாண்டத்தை கண்முன்னே கொண்டு வரும் கலை இயக்குனர் சாபுசிரில், உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என மிகப்பொருத்தமான நடிகர்கள் ஆகியோர்களை இந்த படத்தில் தயாரிப்பு நிறுவனம் இணைத்ததில் இருந்தே இந்த படம் வெற்றிப்பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் தொடக்கவிழாவை கேன்ஸ் திரைப்பட விழாவில் வைத்ததால் உலகமே இந்த படத்தை திரும்பி பார்க்கும் வகையில் செய்தது தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு புத்திசாலித்தனமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழா என்பது உலக அளவில் திரையுலக பிரபலங்கள் கூடும் ஒரு பெருமைக்குரிய இடம். பல ஹாலிவுட் திரைப்படங்கள் இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக ஒரு தென்னிந்திய திரைப்படம் அதுவும் தமிழ் திரைப்படம் அறிமுகமாவது தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த பெருமை மட்டுமின்றி இந்த படத்திற்கு உலக அளவில் கிடைத்த மிகப்பெரிய விளம்பரமாகவும் கருதப்படுகிறது. சமீபத்தில் 'பாகுபலி 2' வெற்றியால் உலகமே தென்னிந்திய திரைப்பட உலகை மரியாதையுடன் பார்க்கும் நிலையில் 'சங்கமித்ரா'வின் தொடக்கம் அமைந்துள்ளது இந்த படத்திற்கு கிடைத்த கூடுதல் சிறப்பு.

'சங்கமித்ரா' படக்குழுவினர்களை பிரான்ஸ் அழைத்து செல்வது என்பது சாதாரண செலவு அல்ல. ஆனால் படக்குழுவினர்களின் கேன்ஸ் விசிட், 'சங்கமித்ரா' படத்திற்கு கிடைத்த உலக அங்கீகாரம் மட்டுமின்றி பிற தயாரிப்பு நிறுவனங்களும் இனி அடுத்தடுத்த கேன்ஸ் விழாவுக்கு செல்லும் வாய்ப்பையும் உருவாக்கி தந்துள்ளது. மேலும் படக்குழுவினர்களின் இந்த வருகை இந்த படத்தின் உலகளாவிய வியாபாரத்திற்கு போடப்பட்ட அடித்தளம் என்பதால் இந்த படத்தின் ரிலீசின் போது வியாபாரத்திற்காக பெரிய அளவில் முயற்சி செய்ய வேண்டிய தேவை இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே 'பாகுபலி 2' படத்தை அடுத்து உலகையே மீண்டும் ஒருமுறை தென்னிந்தியா பக்கம் திரும்பி பார்க்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடி தர காத்திருக்கும் தேனாண்டாள் நிறுவனத்திற்கு எங்களது அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.