close
Choose your channels

விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' படக்குழுவின் 2வது இன்ப அதிர்ச்சி

Thursday, June 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 61வது படத்தின் 'மெர்சல்' டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அட்டகாசமான, யாரும் எதிர்பார்க்காத டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கின் இன்ப அதிர்ச்சியால் விஜய் ரசிகர்கள் முழ்கி இருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இரண்டாவது லுக் போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது

இன்றைய விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த இரண்டாவது போஸ்டரில் விஜய்யின் மேஜிக்மேன் தோற்றம் உள்ளது. சிகப்பு கலரில் அமைந்த இந்த போஸ்டரில் சீட்டுக்கட்டுகள் பறக்க, விஜய்யின் ஸ்டைலான போஸ் உள்ளது. ஏற்கனவே முதல் போஸ்டரே சமூக இணையதளங்களில் டிரண்டாகிய நிலையில் தற்போது இந்த இரண்டாவது போஸ்டரும் டிரண்ட் ஆகி வருகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் 'மெர்சல்' படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.