'ஆண்பாவம்' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை மறைவு.. திரையுலகினர் இரங்கல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகர் பாண்டியராஜன் இயக்கி நடித்த 'ஆண்பாவம்' திரைப்படத்தில் பாட்டியாக நடித்தவருமான கொல்லங்குடி கருப்பையா, இன்று காலமானார். அவருக்கு வயது 99. அவரது மறைவுக்கு திரையுலகினரும், நாட்டுப்புற கலைஞர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான 'ஆண்பாவம்' திரைப்படத்தில், பாண்டியராஜன், பாண்டியன், ரேவதி, சீதா, விகே ராமசாமி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக கொல்லங்குடி கருப்பாயி நடித்து தனது அப்பாவித்தனமான நடிப்பின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தப் படத்தில் அவரது நாட்டுப்புற பாடல்களும் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
'ஆண்பாவம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, 'ஆண்களை நம்பாதே', 'கபடி கபடி', 'கோபாலா கோபாலா' உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கையால் கலைமாமணி விருது பெற்றவர் என்பதும் இவரது கலை பயணத்தில் ஒரு மைல்கல்.
இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக கொல்லங்குடி கருப்பாயி இன்று அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments