பெற்றோர் இறந்த துக்கத்திலும் கண்ணீருடன் தேர்வெழுதிய +2 மாணவி

  • IndiaGlitz, [Monday,March 06 2017]

ஒரு மாணவருக்கோ, மாணவிக்கோ +2 தேர்வு என்பது மிக முக்கியமானது. இந்த தேர்வின் முடிவுதான் அவர்களின் எதிர்கால கனவை நனவாக்கும். இதனால் இந்த தேர்வை அனைத்து மாணவ, மாணவர்களும் பொருப்புடன் எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் மேட்டூர் அருகே தாய், தந்தை இருவரும் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த நிலையில், துக்கத்திற்கு இடையேயும் பெற்றோரின் கனவை நிறைவேற்ற +2 தேர்வை மாணவி ஒருவர் இன்று எழுதியுள்ளார்
நேற்று மாலை மேட்டூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகேசன் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இருவரும் பலியாகினர்.
பெற்றோர் வீட்டில் பிணமாக இருக்கும் நிலையிலும் அவர்களுடைய மூன்றாவது மகள் அமிர்தவல்லி மிகுந்த துக்கத்திற்கு இடையே, பொறியாளர் ஆகவேண்டும் என்ற தனது பெற்றோரின் கனவை நிறைவேற்ற இன்று கண்ணீருடன் தேர்வை எழுதினார். சக மாணவ, மாணவிகள் அமிர்தவல்லிக்கு ஆறுதல் கூறிய காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவுக்கு இருந்தது.

More News

நான் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள். இன்னொரு அதிமுகவா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளந்தது.

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்தின் திடீர் மாற்றம்

தமிழ் சினிமா உலகில் மிக அதிகமான படங்களில் நடித்து கொண்டிருப்பவர் விஜய்சேதுபதி ஒருவரே.

சிம்புவின் பாங்காங் பயணம் எதற்காக?

நடிகர் சிம்பு முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாதா கேரக்டர்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் தற்போது இந்த பட&#

அவர் என்னிடம் கடைசியாக பகிர்ந்து கொண்டது இதுதான். அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் மனைவியின் உருக்கமான பதிவு

சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐதராபத்தை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை மட்டுமின்றி இந்தியாவில் வாழும் இந்தியர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது

என் தந்தை பிச்சை எடுப்பதை கண்ணால் பார்த்தேன். விஷால் உருக்கமான பேச்சு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அனைத்து தயாரிப்பாளர்களும் ஆவேசமாக முந்தைய நிர்வாகிகளின் இயலாமையை ஆவேசமாக விவரித்த நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால் உருக்கமாக பேசினார். விஷால் பேசியவதாவது...