சாதாரண பாஸ்போட்டை மட்டும் வைத்து 16 நாடுகளுக்குச் செல்ல முடியும் தெரியுமா??? அதிகாரப்பூர்வத் தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,September 24 2020]

 

இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட பாஸ்போட்டை வைத்துக்கொண்டு விசாவே இல்லாமல் 16 நாடுகளுக்கு செல்ல முடியும் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது. செவ்வாய் கிழமை அன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும் 43 நாடுகளுக்கு Visa-on-Arrival வசதியையும் 36 நாடுகளுக்கு e-Visa வசதியையும் இந்தியர்கள் அனுபவிக்க முடியும் என்று எழுத்துப் பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தவகையில் பாஸ்போட்டை மட்டுமே வைத்துக் கொண்டு பார்படாஸ் (Barbados), பூடான், டாமினிகா (Dominica), கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங் SAR. மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராடா, நேபாளம், நியு தீவு, செயின்ட் வின்சென்ட் மற்றம் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளில் பாஸ்போட்டை மட்டும் வைத்துக் கொண்டு இலவச விசா நுழைவிற்கு அனுமதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு Visa-on-arrival வசதியை வழங்கும் 43 நாடுகளில் ஈரான், இந்தோனேசியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் அடங்கும். அதேபோல e-visa வசதியை வழங்கம் 36 நாடுகளில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் உண்டு என அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் இலவச விசா பயணம், visa-on-arrival மற்றும் e-visa வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக முரளிதரன் குறிப்பிட்டு உள்ளார். விசா மற்றும் விசா தொடர்பான செயல்முறைகளை வழங்குவது அந்தந்த நாட்டின் ஒருதலைபட்ச முடிவு என்றாலும் இந்திய நாட்டினருக்கான எளிதான மற்றும் தாராளமயமாக்கப்பட்ட விசா கொள்கை தொடர்பான பிரச்சனைகள் வெளிநாடுகளுடனான இருதரப்பு சந்திப்புகளிலும் தவறாமல் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

More News

சுடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2,000 ஆண்டு பழமையான நச்சில்லாத மது… தெறிக்கவிடும் தகவல்!!!

சீனக் கல்லறை ஒன்றில் இருந்து 2 ஆயிரம் பழமையான மது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு சீனாவின் ஹெனான் மாகாணத்தில்

எமிஜாக்சன் வீட்டில் முக்கிய விசேஷம்: வைரலாகும் வீடியோ

இயக்குனர் விஜய் இயக்கிய 'மதராச பட்டணம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்யின் 'தெறி' உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை எமிஜாக்சன்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு: கொரோனா குறித்தும் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனாவா? மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்னை மாடல் அழகி: பரபரப்பு தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும்