'8 தோட்டாக்கள்' இயக்குனரின் அடுத்த படம்.. மீண்டும் க்ரைம் த்ரில்லர் படமா?

  • IndiaGlitz, [Sunday,September 24 2023]

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீ கணேஷ் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்கிய ’8 தோட்டாக்கள்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வெற்றி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்தனர்.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது படத்தை இயக்கினார். அதுதான் ’குருதி ஆட்டம்’. இந்த படத்தில் அதர்வா நாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது இயக்குனர் ஸ்ரீ கணேஷ் வெப் தொடர் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைம் நிறுவனத்திற்காக அவர் இயக்க உள்ள புதிய வெப் தொடரின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த தொடரின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த வெப் தொடரில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் தேர்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த வெப் தொடர்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த வெப் தொடரும் க்ரைம், த்ரில்லர் கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது.

More News

'சந்திரமுகி 2' படத்தின் 450 ஷாட்களை காணவில்லை. பி வாசு கூறிய அதிர்ச்சி தகவல்..!

'சந்திரமுகி 2' படத்தின் ரிலீசுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் 450 ஷாட்களை காணவில்லை என இயக்குனர் பி வாசு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமந்தாவின் 'குஷி': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் தேவரகொண்டவுடன் சமந்தா நடித்த 'குஷி' திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது

பாட்டு இல்லை, ரொமான்ஸ் இல்லை.. ரஜினிக்கு முன் ஜெயிலர்' படத்தை ரிஜக்ட் செய்த பிரபலம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. 

நானும் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன்: கமல்ஹாசன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

20 வயதில் நானும் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன் என உலகநாயகன் கமல்ஹாசன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'ஜவான்' ரிலீஸ் ஆனவுடன் ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்தது: அட்லி

'ஜவான்' ரிலீசான உடன் எனக்கு ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்தது என இயக்குனர் அட்லி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.