ஒரு செய்தி வாசிப்பாளருக்குள் இவ்வளவு இரகசியங்கள் மற்றும் திறமைகளா ?

  • IndiaGlitz, [Monday,April 08 2024]


சன் டிவியில் கடந்த இருபது ஆண்டுகளாக பிரைம் டைம் நியூஸ் ரீடராக பணிபுரிந்து, சினிமா வாய்ப்புகளையும் பெற்று நடித்து , இயக்குநராகவும் அறிமுகமாகி, திருநங்கைகளை பற்றிய மனோஹரி போன்ற குறும்படத்தையும் சிறப்பாக எடுத்து,முதன் முதலில் சிறந்த செய்தி சொற்பொழிவாளர் என்ற மதிப்பிற்குரிய விருதையும் பெற்று, தற்போது ஒரு யூடியூபராக இருக்கும் செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,

நான் யூடியூப்பில் சமையல் வீடியோ காட்சிகள் பதிவிடுவதால் எனக்கு சமையலறை தான் அனுபவமாக உள்ளது.உங்களுக்கு என்ன சமையல் செய்து காட்டப் போகிறேன் என்றால் கடி .இந்த வகைஉணவு பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற இடங்களில் பிரபலமான உணவு ஆகும்.

வெயில் காலத்தில் இதை சமைத்து சாப்பிடலாம்.ஒரு சமையலுக்கு தேவை பொறுமை மட்டுமல்ல தன்னம்பிக்கையும் கூட.கடலை மாவு மற்றும் மஞ்சள் சேர்த்து தயிரில் கரைத்து ஊற்ற வேண்டும்.இதற்கு அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொதுவான பொருட்களையே உபயோகப் படுத்தப்போகிறோம்.என்னோட ஈசி சமையலைப் பொறுத்தவரை ஒரு உணவை குறைந்த நேரத்தில் தரமான ருசியான உணவை சமைப்பது ஆகும்.

ஆரம்பத்தில் சமையல் என்பது எனக்குமே கஷ்டமாக இருந்தது.அதற்கு மற்றுமொரு வழி தான் இந்த ஈசி சமையல்.என்னோட சேனலில் பொதுவாகவே மிகவும் ஈசியாக சமைக்கக் கூடிய உணவையே சமைத்து வீடியோவாகப் பதிவிடுவேன்.இதற்கு நிறைய ரெஸ்பான்ஸ் கிடைத்தது.ஆனால் வேகமாக சமைத்தாலும் ஆரோக்கியமான உணவு சமைக்க வேண்டும்.இந்த கடியில் கொஞ்சமாக இஞ்சி மற்றும் மல்லி,உப்பு சேர்க்க வேண்டும்.அப்போது தான் வாசனை நன்றாக இருக்கும்.மொத்தமாக அதை கிலறி தண்ணீர் சேர்க்க வேண்டும்.இது பதமான நிலை வரும் வரை அதை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.இது நல்ல கொதி நிலைக்கு வந்த பிறகு ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பக்கோடாவை இதில் சேர்த்து விட‌ வேண்டும்.இதுவே கடி..சிறிய நேரத்தில் ஒரு சுவையான உணவு ரெடி.

சமையல் என்பது நம் மனம் சார்ந்த விஷயம்.சமையலறைக்கு போக வேண்டுமா? சமைக்க வேண்டுமா? என்ற எண்ணம் தோன்றும் போதே நமக்கு பாதி எனர்ஜி போய் விடும்.அப்படி இல்லாமல் நம் குடும்பம், சமையலறை, ஆரோக்கியம் என‌ நினைத்தாலே சமையல் சிறப்பாக செய்யலாம்.அதே போல் தினமும் நான் ஈசியாக சமைக்கக் கூடிய உணவு முறைக்கானத் திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும்.

மேலும் நான் என்றைக்கும் ஏன் செய்தி வாசிப்பாளராக ஆனோம் என யோசித்ததே இல்லை.நான் விரும்பி தேர்ந்தெடுத்தத் தேர்வு இது.அதை சிறப்பாக செய்தேன் என நினைக்கிறேன்.அதே போல் எல்லோருக்குமே சுஜாதா பாபு என்று தான் தெரியும்.ஆனால் என் கணவர் பாபு என்றால் யாருக்கும் தெரியாது.என்னோட குரல்லியே அவரைப் பற்றி பேசி பதிவிட வேண்டும் என நினைத்தேன்

அதே போல் அவருடைய வேலையில் ஓய்வு பெற்ற போது இந்த வீடியோ அவருக்கு பரிசாக இருக்கும் என்று பதிவிட்டேன்.அது பெரிய இன்ப அதிர்ச்சியாக அவருக்கு இருந்தது.அவர் கண் கலங்கிய தருணம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியை தான் வாசிக்கப் போகிறோம்

அதுவே பெரிய சவாலாக இருந்தது.என்னுடைய சுகத் துக்கங்களை எல்லாம் மறைத்து அந்த இடத்தில் ஒரு செய்தி வாசிப்பாளராக எனது சிறப்பை வேலையின் ஈடுபாட்டை கொடுக்க வேண்டும் என நினைத்தேன் மேலும் கொடுத்தேன்‌.இது போன்ற சுஜாதா பாபு அவர்களின் பல மீடியா பயணங்கள் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

More News

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் டிடிஎப் வாசன் காதலியா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் டிடிஎஃப் வாசன் காதலி போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனை மெண்டல் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.. அண்ணாமலையின் சர்ச்சை கருத்து..!

நடிகர் கமல்ஹாசனை மெண்டல் மருத்துவமனையில் அனுமதித்து அவரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

சாய்பாபா கோவிலுக்கு சென்ற தளபதி விஜய்.. புகைப்படத்தை உடனே நீக்கியதற்கு என்ன காரணம்?

தளபதி விஜய் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் ஒரு சில நிமிடங்களில் அந்த புகைப்படம்

சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு சம்பவம்: ரஜினியின் 'தலைவர் 171' ப்ரோமோ பார்த்த பிரபலம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 171' படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த வீடியோவை

அடுத்தடுத்து பாலித்தீவு செல்லும் 'எதிர்நீச்சல்' நடிகைகள்.. படப்பிடிப்பு ரத்தா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் அடுத்தடுத்து சுற்றுலா செல்வதை பார்க்கும் போது 'எதிர்நீச்சல்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா