குப்பை லாரியில் அசைந்த ஒரு உருவம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


அமெரிக்காவின் நியூயார்க்கின் புறநகர் பகுதியான காமாக்கில் குப்பை அள்ளும் லாரியில் குப்பைக் குவியலுக்கு மத்தியிலிருந்து ஒருவர் சடலமாகவும் இன்னொருவர் காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் உள்ள டி. ரோஜர்ஸ் உயர்நிலைப் பள்ளியில் குப்பைகள் சேகரிக்கும் லாரி நிறுத்தப் பட்டபோது பள்ளிக் கட்டித்தின் மாடியிலிருந்து குப்பை லாரியை கவனித்த கல்வி ஆலோசகர் ஒருவர் லாரியின் குப்பைகளுக்கிடையே ஒரு உருவம் அசைவதைக் கண்டு அதிர்ச்சியுற்று உடனே லாரியின் ஓட்டுனருக்கும் நகர அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார்.
அவசரகால மீட்புப் படையினர் விரைந்து வந்து அந்த குப்பை லாரியில் காயங்களோடு இருந்த ஒருவரை மீட்தோடு குப்பைகளுக்கு இடையேயிருந்து ஒரு உயிரற்ற சடலத்தையும் மீட்டனர்.
நியூயார்க் நகரத்தையொட்டிய பகுதிகளில் வீட்ற்றவர்களாக அலையும் பலர் வணிக வளாகங்களின் குப்பை தொட்டிகளில் ஏறி இரவு நேரங்களில் படுத்துக் கொள்வதும் இவ்வாறு அசந்து தூங்குபவர்களில் சிலர் சில சந்தர்ப்பங்களில் தானியங்கி குப்பை அள்ளும் எந்திரத்தில் சிக்கி காயப்படுவதும் பின்னர் யாரும் கவனிக்காத சூழலில் உயிரிழப்பதும் ஏற்கனவே சிலமுறை நடைபெற்றிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வரும் நிலையில் இந்த பகுதியின் குப்பைகளை கையாளும் லாஸ் சர்வீசியோஸ் பப்ளிகோஸ் டி பில்லிங்ஸ் நிறுவனம் இது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com